Monday 26 March 2018

சிலம்பம் - தமிழர்களின் போர்க்கள கலை: ஒரு அடிப்படை வெளிப்பாடு

சிலம்பம்’’ என்பது தமிழகத்தில் குறிப்பாக தமிழகத்தின் தென்பகுதியான கன்னியாகுமரிதிருநெல்வேலி மாவட்டங்களில் பயிற்றுவிக்கப்படும் தற்காப்பு கலை முறையாகும்.

சிலம்பம்:

சிலம்பம் என்ற சொல் சிலம்பல் என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்க வேண்டும். சிலம்பல் என்றால் பலவித ஒலிகளைக் குறிக்கும். சிலம்பப் பயிற்சியின்போது பலவித ஓசைகள் கேட்பதால் இது சிலம்பல் எனப்பட்டு பின்னர் "சிலம்பம்" என மருவியிருக்கலாம். மேலும் "சிலம்பன்" என்ற சொல் குறிஞ்சி நிலக் கடவுளான முருகனைக் குறிக்கும். அந்த முருகனை நாயகனாக கொண்டு திகழுவதால் இக்கலை "சிலம்பம்" என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் பயிற்றுவிக்கப்படும் இத்தற்காப்புக்கலை "தெற்கன் களரி" என்று முந்தைய காலத்தில் வழங்கிவந்துள்ளது.


சிலம்பம்
                            
இதில் வர்மம் உட்பட பல் வேறு பயிற்சி முறைகள் உள்ளடங்கிக் காணப்படுவதை கீழ்கண்ட பாடல் விளக்குகிறது.

காப்பென்ற கம்பு முறை சுவடுனோடு
கருவான ஒழிவு முதல் பிரிவு தானும்
நாப்பென்ற கை பெருக்கம் மெய் பெருக்கம்
நலம்பெரிய பூட்டுகளும் தடுத்தல் தட்டல்
காப்பென்ற சர்குருவின் முனிவர் பாதம்
சரியாமல் எப்போதும் நினைக்க வேணும்
கோப்பென்ற எடுத்தெறிதல் வர்மம் செய்தல்
கூறுவேன் கோபிகட்கு ஈந்திடாதே

                                                                      (
வீமன் வழி குறுந்தடி சிரமம் - 120)

சிலம்பத்தில் பயிற்றுவிக்கப்படும் பயிற்சிகள்


  1. உடற் பயிற்சிகள் 
  2. சுவடு முறைகள் 
  3. அடி முறைகள் 
  4. தடி முறைகள் 
  5. ஆயுதப் பெருக்கம் 
  6. குஸ்தி வரிசைகள் 
  7. மல் வரிசைகள் 
  8. கசரத் வரிசைகள் 
  9. பூட்டு - பிரிவு முறைகள் 
  10. வர்ம பிரயோகங்களும் வைத்தியமும் 

1. உடற் பயிற்சிகள் :

                            இது தரையில் விளையாடும் உடற்பயிற்சியாகும். இது உடலுக்கு வன்மை தருவதோடு மற்ற சிலம்ப விளையாட்டுகளுக்கு உடலை தயார் செய்யும் பயிற்சிகளாகவும் அமையும்.

(i)  
எடையில்லாப்பயிற்சிகள்


  1. உக்கி 
  2. இடுப்பைத் திருகுதல் 
  3. உடலைச் சுழற்றுதல் 
  4. குனிந்து எழுதல் 
  5. கால் விரித்தல் 
  6. துள்ளுதல்

(ii)  
எடைப்பயிற்சிகள்


  1. எடையுடன் உட்கார்ந்து எழுதல் 
  2. கர்லா கட்டை சுழற்றுதல் 
  3. இளவட்டக் கல் தூக்கி மறித்தல் 
  4. சந்துலாக் கல் தூக்குதல் 

(iii)  யோகப்பயிற்சிகள் : 

  1. இயம - நியமங்கள் 
  2. யோகாசனங்கள் 
  3. மூச்சுப் பயிற்சிகள் 
  4. தியானங்கள்

Sandula Kal (Traditional Dumb Bell used in Tamil Nadu for Body Building in Physical Exercise division of Silambam)

2. சுவடு முறைகள் :

ஆதி யந்த சுவடு முறை
     
அருமையாய் சொல்லக் கேள்
நீதியாக அறுபத்தி நாலும்
     
நலமாக உரைப்பேன் இங்கே’’     

                           
                                 (அகத்தியர் சுவடு முறை - 64)
                    

கால்களை மாற்றி மாற்றி தரையில் பதிய வைக்கும் முறையே சுவடு (foot steps).  சிலம்ப பயிற்சியின்போது கால்களை சூத்திரம் வைத்து கால்தடம் பதிப்பதன் அடிப்படையில் பல்வேறு சுவடு முறைகள் விவரிக்கப்பட்டுள்ளது. கம்பு முதலான ஆயுதம் விளையாட்டுகளுக்கும் கால்களை வைக்கும் சுவடு முறையே அடிப்படை என்றாலும் ஆயுதமின்றி வெறும் கையால் விளையாடப்படும் தனி சுவடு முறைகள் பற்றிய செய்திகள் ஏராளம் காணக்கிடைக்கிறது.

தட்டாக சுவடு முறை
தயவாக பன்னிரெண்டே யாச்சு’’   
                               (
அக
த்தியர் சுவடு முறை - 64)
                      
சுவடுமுறைகள் பலவகைப்படும். அதில் முக்கிய சுவடுகள் பன்னிரெண்டு வகைப்படும். இச்சுவடுகள் வர்மத்தோடு தொடர்புடையவைகளாகும். ஒவ்வொரு சுவடுகளுக்கும் பல்வேறு பிரிவுகள் உண்டு

  1. ஒற்றை சுவடுகள் 
  2. இரட்டை சுவடுகள் 
  3. பிரிவுச் சுவடுகள் 
  4. சோடிச் சுவடுகள் 
  5. கூட்ட சுவடுகள் 
  6. சீன சுவடுகள்
  7. வடக்கன் வழிச் சுவடுகள் 
  8. தெக்கன் வழிச் சுவடுகள் 
  9. வாலி வழிச் சுவடுகள் 
  10. பீமன் வரிசை சுவடுகள் 
  11. மல்லன் வரிசை சுவடுகள் 
  12. நேர் சுவடுகள் 
  13. நேர் குறுக்கு சுவடுகள் 
  14. வட்டச் சுவடுகள் 
  15. சதுரச் சுவடுகள் 
  16. முக்கோணச் சுவடுகள் 
  17. தேங்காய்ச் சுவடுகள் 
  18. சைலாத்துச் சுவடுகள் 
  19. ஒழிவுச் சுவடுகள் 
  20. அங்கச் சுவடுகள் 
  21. இரட்டையங்கச் சுவடுகள் 
  22. மல்லங்கச் சுவடுகள் 
  23. மறியங்கச் சுவடுகள் 
  24. துள்ளங்கச் சுவடுகள் 
  25. சூடியங்கச் சுவடுகள் 
  26. நிலையங்கச் சுவடுகள் 
  27. பாவலாச் சுவடுகள் 
  28. தட்டு வர்மச் சுவடுகள் 
  29. பொன்னுச் சுவடு 
  30. குதிரைச் சுவடு 
  31. பன்றிச் சுவடு 
  32. புலிச் சுவடு 
  33. கோழிச் சுவடு 
  34. பெருக்கச் சுவடுகள் 
  35. தடவறைச் சுவடுகள் 
  36. அறுபத்தி நாலங்கச் சுவடுகள்

3. அடி முறைகள் :

அடி முறை 
இது வெறும்கை கொண்டு அடிக்கும் அடிமுறையாகும்இதில் எதிர் தாக்குதலை தடை செய்யும் முறைகள்எதிர்த்து அடிக்கும் முறைகள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகிறதுஇதில் பல வரிசைகளும்அதற்கு பல்வேறு உட்பிரிவுகளும் உண்டு

  1. நடசாரி அடி முறைகள் 
  2. பீமன் வரிசை அடி முறைகள் 
  3. சைலாத்து அடி முறைகள் 
  4. தடவற வழி அடி முறைகள்






4. தடி முறைகள் :
                    
கம்புகளால் கையாளப்படும் அடிமுறைகளை தடிமுறைகள் எனலாம். இது கம்பின் நீளத்துக்கு தக்கவாறு குறுந்தடி முறைகள், நெடுந்தடி முறைகள் என பிரிக்கப்பட்டுள்ளது. கம்பின் நீளம் 2 சாண், 3 சாண், மூன்றரை சாண், 5 சாண் மற்றும் நெற்றியளவுகளில் தேர்வு செய்யப்படுகிறது

  1. குறுந் தடி (2 சாண் - 5 சாண்
  2. நெடுந் தடி (நெற்றி முட்டும் அளவு)

i)
குறுந்தடிமுறைகள் :

நாட்டமுடன்எட்டுவிரலோடுஇருசாண்
சாற்றியஒட்டைதடியதைமுறித்து’’ 
                                                                     (
பீமன்வழிகுறுந்தடிசிரமம்-120)
                     
     

பீமன் வழி குறுந்தடியின் அளவு 8 விரலளவுடன் இரண்டு சாணும் ஓர் ஒட்டையுமாகும் (8 + 24 + 10 = 42 விரலளவுடன்). பொதுவாக குறுந்தடியின் அளவு 2 முதல் 5 சாண்களில் இருக்கும் பல்வேறு குறுந்தடி முறைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் 12 அடவுகள் அமைந்திருக்கும். இது முச்சாண், சிரமம், சிலமம், கட்டைக்கம்பு, சல்லிக்குச்சி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதில் முக்கியமானது,
1) பீமன்வழிகுறுந்தடிசிரமம்

2) அனுமன்வழிகுறுந்தடிசிரமம்


ii)
நெடுந்தடிமுறைகள் :

நெற்றியளவுள்ள கம்புகள் நெடுந்தடி முறைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இது நெடுஞ்சிலம்பம் என்று அழைக்கப்படுகிறது. இதில் 64 வரிசைகள் உண்டு என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு வரிசையும் பொதுவாக 12 அடவுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.



சில்ம்ப மாணவர்கள், பிரான்ஸ்

வரிசைகள் :


  1. 1 - 14   வரிசைகளுக்கு பெயர் குறிப்பிடாமல் 'நெடுஞ்சிலம்பக் கலை' என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ளது
  2. "
  3. கணபதி வரிசை 
  4. சக்தி வரிசை 
  5. சிவன் வரிசை 
  6. விஷ்ணு வரிசை 
  7. இடையன் வரிசை 
  8. பனையேறி மல்லன் வரிசை 
  9. காவடி சிந்து வரிசை 
  10. காவிய வரிசை 
  11. குடிகார வரிசை 
  12. பீமன் வரிசை 
  13. போர் வரிசை 
  14. கரடிக் குன்னல் வரிசை 
  15. ஐயங்கார் வரிசை 
  16. மிராட்டிய வரிசை 
  17. சறுக்கு வரிசை 
  18. துலுக்க பாண வரிசை 
  19. கிழவன் வரிசை 
  20. சாம்புவர் வரிசை 
  21. மறவன் வரிசை 
  22. பதுங்கல் வரிசை 
  23. அச்சர (மறை) வரிசை 
  24. முடவன் வரிசை 
  25. சிவ தாண்டவ வரிசை 
  26. நாக பாண வரிசை 
  27. கங்கண வரிசை 
  28. நாக பந்த வரிசை 
  29. குறவஞ்சி இயக்கம் வரிசை 
  30. குறவஞ்சி கள்ளம் வரிசை 
  31. சிங்கப் பாய்ச்சல் இறக்க வரிசை 
  32. காட்டுக் காளை இறக்க வரிசை 
  33. காட்டான் வரிசை 
  34. பன்றி விலக்கு வரிசை 
  35. குடம் கரக்கி வரிசை 
  36. மூட்டுச் சிலா வரிசை 
  37. வெட்டும் சக்கர வரிசை 
  38. கவுனெரி வரிசை 
  39. பிரம்மாஸ்திர வரிசை 
  40. கடகாஸ்திர வரிசை 
  41. திரிதோச வரிசை 
  42. திரிசூல வரிசை 
  43. பஞ்ச பூத வரிசை 
  44. வெட்டு விழும் சக்கர வரிசை 
  45. வாலி வரிசை 
  46. மல்லன் வரிசை 
  47. சாமி வரிசை 
  48. அம்மன் வரிசை 
  49. கூடல் வழி சிரம வரிசை 
  50. சறுக்கு வரிசை 
  51. படை வீச்சு 
  52. இரெட்டு

5. ஆயுதப்பெருக்கம் :

கம்பை ஆயுதமாக பயன்படுத்திய மனிதன் நாகரீகம் வளர வளர கம்பை கைப்பிடி ஆயுதமாகக் கொண்டு பல்வேறு உருவங்களில் ஆயுதங்களை உருவாக்கி தற்காப்பிற்கும், போர் புரிவதற்கும் பயன்படுத்த ஆரம்பித்தான்.


  1. கத்தி மற்று கட்டாரி முறைகள்
  2. வெட்டுக்கத்தி மற்றும் வீச்சரிவாள் முறைகள் 
  3. கண்டக் கோடாரிக முறைகள்
  4. மடு (மான்கொம்புமுு
  5. மரு (இருமுனைக்கூர்வாள்
  6. வாளும் கேடயமும் 
  7. சுருட்டு வாளும் (சுருள் பட்டா) கேடயமும்
            i) ஓரிலை சுருள்
            ii) இரட்டைச் சுருள்
            iii) மூவிலைச் சுருள்
  8. வேல் கம்பு (ஈட்டி) வரிசை 
  9. கதாயுத வரிசை 
  10. இடி கட்டை வரிசை 
  11. கல் வீச்சு 
  12. வளரி வீச்சு 
  13. சங்கிலித் தொடர் வீச்சு 
  14. அலங்கார வரிசைகள் 
        i) பூப்பாண வெட்டு
        ii) சங்கிலிப் பாண வெட்டு

        iii) சக்கரப் பாண வெட்டு

        iv) தீப்பாண வெட்டு



6. குஸ்திவரிசைகள் :


பாருலகில் குஸ்தி மல்யுத்தம் படித்திட்டால்
பலமது இருக்கும் வரை..................”


குஸ்தி

என்ற வரிகளிலிருந்து குஸ்தி நம்நாட்டில் வழக்கில் இருந்துவந்துள்ளது என்பது விளங்குகிறது. இந்த குஸ்தியிலும் பல்வேறு வரிசைகள் உண்டு.

7. மல்வரிசைகள் :



மல் வரிசையிலும் பல பிரிவுகள் உள்ளன. அவை: 

  1. அடிபிடி மல் 
  2. கட்டு மல் 
  3. எறி மல் 
  4. மண்ணடி மல்






8. கசரத்வரிசைகள் :


  1. மல்லன் கசரத் 
  2. தண்டால் கசரத் 
  3. பயில்வான் கசரத் 
  4. சக்கர கசரத் 
  5. மறி கசரத் 
  6. பாய்ச்சல் கசரத் 
  7. நிலை கசரத் 
  8. சாட்டக் கசரத் 
  9. தெண்டில் கசரத் 
  10. தவளை கசரத் 
  11. அணில் கசரத் 
  12. பாம்பு கசரத்


9. பூட்டு - பிரிவுமுறைகள் (வர்ம பிடி முறைகள்):

இது வர்ம பிடிமுறை என்றும் வழங்கப்படும். ஆயுதங்களின் உதவி ஏதுமின்றி, தன்னை தாக்க ஒருவன் ஆயுதம் கொண்டோ அல்லது ஆயுதம் இல்லாமலோ வரும்போது அவனை வெறும் கைகளாலேயே பிடித்து வைக்கும் முறை இதுவாகும். இம்முறையில் பிடிபட்டவன் எளிதில் தப்பமுடியாதபடி பூட்டி வைத்ததைப்போல உணர்வார்கள். இதிலிருந்து தப்ப ஒவ்வொரு பூட்டி உழந்தும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவு முறைகள் உண்டு. இது இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். மிகவும் அனுபவமிக்கவர்க்கே இது தெரியும். பூட்டு முறைகளில் உடலின் தசைநாண்கள், விசிகள், நரம்புகள், எலும்பு சந்திகள் போன்றவை பாதிப்படைகின்றன. இது 64 வகைப்படும் என்று கூறுவர்



  1. 1 - 13  பெரின்றி எழுதப்பட்ட பூட்டுகள் 
  2. 1 - 13  பெரின்றி எழுதப்பட்ட பூட்டுகள்  
  3. 1 - 13  பெரின்றி எழுதப்பட்ட பூட்டுகள் 
  4. 1 - 13  பெரின்றி எழுதப்பட்ட பூட்டுகள் 
  5. 1 - 13  பெரின்றி எழுதப்பட்ட பூட்டுகள் 
  6. 1 - 13  பெரின்றி எழுதப்பட்ட பூட்டுகள் 
  7. 1 - 13  பெரின்றி எழுதப்பட்ட பூட்டுகள்  
  8. 1 - 13  பெரின்றி எழுதப்பட்ட பூட்டுகள் 
  9. 1 - 13  பெரின்றி எழுதப்பட்ட பூட்டுகள் 
  10. 1 - 13  பெரின்றி எழுதப்பட்ட பூட்டுகள் 
  11. 1 - 13  பெரின்றி எழுதப்பட்ட பூட்டுகள் 
  12. 1 - 13  பெரின்றி எழுதப்பட்ட பூட்டுகள் 
  13. 1 - 13  பெரின்றி எழுதப்பட்ட பூட்டுகள் 
  14. துதிக்கைப் பூட்டு () அடித்தகைப் பூட்டு 
  15. ஒற்றைகைப்புறப் பூட்டு 
  16. மலத்திக் கைப்புறப் பூட்டு 
  17. கவிழ்த்தி கைப்புறப் பூட்டு 
  18. ஏந்து கைப்புறப் பூட்டு 
  19. இடுப்புப் பிடி 
  20. கூட்டிச் சேர்த்துப் பிடி (அகப் பிடி
  21. அடக்கிப் பிடி (கல்லிடைப் பிடி
  22. குடும்பிப் பிடி 
  23. சதைப் பிடி (பள்ளைப் பிடி
  24. வள்ளக்கை பிடி 
  25. முட்டு முறித்தான் பூட்டு 
  26. விரல்முறி பூட்டு 
  27. வலம் புரிப் பூட்டு 
  28. இடம் புரிப் பூட்டு 
  29. வெற்றிலை காலப் பூட்டு 
  30. நட்சத்திரக் காலப் பூட்டு 
  31. அடியறக் காலப் பூட்டு 
  32. நெஞ்சடைப்பான் பூட்டு 
  33. நெஞ்சு பிழந்தான் பூட்டு 
  34. கடுவாய் பிடி 
  35. தாடிப் பிடி 
  36. புறம் பிடி 
  37. கம்மல் பிடி (அரசவாரி
  38. வழி பார்த்தான் பிடி 
  39. இடை கோரிப் பிடி 
  40. கடுக்கன் கழற்றிப் பூட்டு 
  41. கள்ளன் பிடி 
  42. ஒடுக்குப் பிடி 
  43. கவிழ்த்திப் பிடி 
  44. மூச்சடக்கிப் பிடி 
  45. பிடித்து இழுத் தெறி 
  46. வழுந்து குஞ்சி 
  47. எடுத் தெறி 
  48. வானம் பார்த்தான் 
  49. சூடிப் பிடி 
  50. கவிழ்த்திக் கால் பிடி 
  51. சங்காயப் பூட்டு 
  52. தாலாட்டுப் பிடி 
  53. வள்ளிப் பூட்டு 
  54. பின்னல் பூட்டு 
  55. கீழ்வாரிப் பூட்டு 
  56. மேல்வாரிப் பூட்டு 
  57. சிங்கப் பூட்டு 
  58. குதிரைப் பூட்டு 
  59. தோளேந்திப் பூட்டு 
  60. சிப்பிறப் பூட்டு 
  61. ஆனைவாரிப் பூட்டு 
  62. சிப்பிறப் பூட்டு 
  63. கத்திரி பிடி 
  64. மதமடக்கி பிடி

பைரி :

பூட்டு முறைகளில் மிகவும் கொடியமுறை பைரி என்பதாகும். இது நான்கு வகைப்படும். இதற்கு பிரிவோ, தடையோ கிடையாது என்று கூறப்படுகிறது

  1. ஆறுதீண்டாப் பைரி 
  2. கண்டூசப் பைரி 
  3. சரபுராப் பைரி 
  4. நீலகண்டப் பைரி (சவரிக் கட்டு)

வர்மக் கலை

வர்மக் கலை சில்ம்பத்தில் ஒரு முக்கிய பகுதியாகும். இதில் இரண்டு வகைகள் உள்ளன.
  1. வர்ம அடி மற்றும் 
  2. வர்ம சிகிச்சை
  3. வாசி யோகம்  
நாம் நேரடியாக வர்மம் மீது தாக்க முடியாது, எனவே குறிப்பிட்ட  முத்திரைகளை  பயன்படுத்தி மட்டுமே வர்மம் மீது  தாக்க முடியும்  

அதற்கான முத்திரைகள் இங்கே 

வர்ம அடி முத்திரைகள்

நாட்டியத்தில் கைவிரல்களை நீட்டியும், மடக்கியும், சுழற்றியும் பலவிதமாக அபிநயம் செய்யும் முறையே முத்திரைகள் எனப்படும். இது நாட்டியத்திற்கு மேலும் அழகையும், கவர்ச்சியையும் தருகிறது. அதேபோல வர்மக்கலையிலும் சிலவகையான முத்திரைகள் உள்ளன. இவை கைகளில் ஆயுதம் இல்லாத தருணங்களில், தாக்கவரும் சமயங்களில் தற்காப்பிற்கும், தாக்கவும் பயன்படுகிறது. மேலும் இம்முத்திரைகள் வர்ம அடிபட்டவரை காப்பாற்றும் வர்ம இளக்கு முறையிலும் பயன்படுகிறது.

                                           பொதுவாக வர்மக்கலையில் பனிரெண்டு முத்திரைகள் பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும் இவை மட்டுமல்லாது வேறு பல முத்திரைகளும் உள்ளன. அந்த முத்திரைகள் பெரும்பாலும் மேற்கூறப்பட்ட பனிரெண்டு முத்திரைகளின் விரிவுகளாகவே (Variation) உள்ளன. இனி வர்மக்கலையில் பன்னெடும் காலங்களாக பயிலப்பட்டு வரும் முத்திரைகளை பற்றி பார்க்கலாம்.  

  1. யானை முக முத்திரை 
  2. குதிரை முக முத்திரை 
  3. சர்ப்ப முத்திரை 
  4. சக்தி முத்திரை 
  5. விஷ்ணு முத்திரை 
  6. சக்கர முத்திரை 
  7. சங்கு முத்திரை 
  8. திரிசூல   முத்திரை 
  9. வேல் முத்திரை
  10. பஞ்ச முத்திரை 
  11. புறங்கை முத்திரை 
  12. புறங்கால் முத்திரை 

யானை முக முத்திரை: 

யானை முக முத்திரை 
 கை விரல்கள் அனைத்தையும் மடக்கி, நடு விரலை மாத்திரம் மடக்கிய நிலையிலேயே சற்று மேலே உயர்த்தி யானையின் துதிக்கையை போல காட்ட வேண்டும். இது "யானை முக துத்திரை" எனப்படும்.

குதிரை முக முத்திரை: 

குதிரை முக முத்திரை 
கை விரல்கள் அனைத்தையும் மடக்கி ஆள்காட்டி விரலை மாத்திரம் மடக்கிய நிலையிலேயே சற்று உயர்த்தி கட்டை விரலை நன்றாக அழுத்தி பிடிக்க வேண்டும். இதுவே "குதிரை முக முத்திரை"

சர்ப்ப முத்திரை: 

சர்ப்ப முத்திரை 
 கை விரல்களில் ஆள்காட்டி விரலை மாத்திரம் சற்று தூக்கி நிறுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்களையும் கட்டை விரலால் அழுத்தி பிடிக்க வேண்டும். இது "சர்ப்ப முத்திரை" ஆகும்.


 சக்தி முத்திரை: 

சக்தி முத்திரை
கை விரல்கள் அனைத்தையும் நீட்டி ஒன்றோடு ஒன்று இணைத்து இறுக்க பிடிக்க வேண்டும். இதுவே "சக்தி முத்திரை" எனப்படும். 



விஷ்ணு முத்திரை: 

விஷ்ணு முத்திரை 
கை விரல்களின் நடுவிரலையும் , ஆள்காட்டி விரலையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து நேராக நிறுத்த வேண்டும். கட்டை விரலால் மற்ற இரண்டு விரல்களையும் அழுத்திப் பிடிக்க வேண்டும். இதுவே "விஷ்ணு முத்திரை" ஆகும் 


சக்கர முத்திரை: 

சக்கர முத்திரை 
ஆள்காட்டி விரலை மாத்திரம் விறைப்பாக வலுவாக தூக்கி நிறுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்களையும் கட்டை விரலால் அழுத்திப் பிடிக்க வேண்டும். இது "சக்கர முத்திரை" எனப்படும்.

சங்கு முத்திரை: 

சங்கு முத்திரை
கை விரல்கள் நான்கையும் பாதியாக மடக்கி கட்டை விரலை அழுத்திப் பிடிக்க வேண்டும். இதை பார்ப்பதற்கு சங்கின் அடிப்புறம் போல் இருக்கும். இது "சங்கு முத்திரை" எனப்படும்


திரிசூல முத்திரை: 

திரிசூல முத்திரை
ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் கட்டைவிரல் ஆகியவற்றை  நீட்ட  வேண்டும். நீட்டிய விரல்கள் வலுவாக இருக்க வேண்டும். மற்ற இரண்டு விரல்களையும் மடக்கிப் பிடிக்க வேண்டும். இதுவே "வேல் முத்திரை" எனப்படும். 



வேல் முத்திரை:

வேல் முத்திரை
ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் வலுவாக நீட்டிக் கொள்ள வேண்டும். மற்ற விரல்களை மடக்கி வைத்து கொள்ள வேண்டும். இதுவே "திரிசூல முத்திரை". 

பஞ்ச முத்திரை: 

பஞ்ச முத்திரை
கை விரல்கள் அனைத்தையும் பிரித்து பாதியாக மடக்கி விரல்களை வலுவுள்ளதாக வைக்க வேண்டும். இதுவே "பஞ்ச முத்திரை" எனப்படும். 

புறங்கை முத்திரை: 

புறங்கை முத்திரை 
கை விரல்கள் அனைத்தையும் மடக்கி வலுவாக பிடிக்கும் போது பையின் மேல் முட்டி பகுதியை வலுவாக நிறுத்தவேண்டும். இதுவே "புறங்கை முத்திரை"  

புறங்கால் முத்திரை: 

புறங்கால் முத்திரை
காலை விறைப்பாக நீட்டி காலின் குதிகாலை வலுவாக தூக்கி நிறுத்த வேண்டும். இதுவே "குதிகால் முத்திரை" எனப்படும்.


வர்ம சிகிச்சை: 

வர்மா  மருத்துவம் அனைத்து மருந்துகளிலும் சிறப்பானதாய் இருக்கிறது. 

 வர்ம சிகிச்சை வீடியோக்கள் இங்கே 




வர்ம சிகிச்சை வீடியோக்கள் இன்னும் பல பார்க்க இங்கே அழுத்தவும் 


இந்த கலை கற்றுக்கொள்ள அனைவருக்கும், குறிப்பாக தமிழ் மக்களுக்கு கோரிக்கை  விடுக்கிறேன் 












மிக்க நன்றி,   



பெஞ்சமின் ஃபர்ரோஸ்    

 


No comments:

Post a Comment