Thursday, 29 March 2018

களரிப் பயட்டு - கேரளாவின் போர்க்கள கலை: ஒரு அடிப்படை வெளிப்பாடு

கேரளாவில் பயிற்றுவிக்கப்படும் புகழ்மிக்க களரி ‘வடக்கன் களரி’ எனப்படும். இம்முறையும் இடத்துக்குத் தக்கபடியும் ஆசான்களின் அனுபவங்களுக்கேற்றபடியும் பல மாறுபாடுகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் அடிப்படையில் பல ஒற்றுமைகளைப் பெற்றே விளங்குகின்றது.

களரிப் பயட்டு


இக்களரி முறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவை : 

  1. வந்தனம் 
  2. மெய் பயிற்சிகள் 
  3. ஆயுத பயிற்சிகள் 
  4. வியூகங்களும் வடிவுகளும் 
  5. கிரந்த பூட்டு முறைகள் 
  6. தனுர் வேத பிடிமுறைகள் 
  7. பயிற்சி நிலைகள் 
  8. சாட்டங்களும் மறிவுகளும் 
  9. தட்டு மர்மங்களும் கைப்பிரயோகங்களும் 
  10.  தடவுகளும் தைல யோகங்களும்



1. வந்தனம் :

வந்தனம்

களரியையும், குருவையும், ஆயுதங்களையும் தொழுது கொள்ளும் முறைகளாகும். இதில் பலவகை வணக்க முறைகள் உள்ளன.


2. மெய் பயிற்சிகள் :

மெய் பயிற்சிகள்

இது களரியின் ஆரம்ப உடற்பயிற்சியாகும். உடற்பயிற்சிக்காக பொதுவாக 12 வித அடவுகள் கையாளப்படுகின்றன. இந்த அடவுகளை பயிற்சிக்கும் போது உடல் மற்ற ஆயுதப் பயிற்சிகளை கையாள்வதற்கேற்ப பண்படுகிறது.


3. ஆயுதப் பயிற்சிகள் :

ஆயுத பயிற்சிகள்

ஆயுதங்களை வைத்து பயிற்றுவிக்கப்படும் களரியில் பல பிரிவுகளில் உண்டு. அவைகளாவன : 
  1. பன்னிரு சாண் (பெருவடி) அடவுகள் (12) 
  2. முச்சாண் (சிறுவடி) அடவுகள் (12) 
  3. கதாயுத அடவுகள் (12) 
  4. ஒற்றை அடவுகள் (18) 
  5. கட்டாரி அடவுகள் (12) 
  6. வாள்-கேடய அடவுகள் (12) 
  7. குந்தம் (ஈட்டி அல்லது வேல்) அடவுகள் (12) 
  8. உறுமியும் பரிசையும் (சுருள் வாளும் கேடயமும்) 
  9. வில்லம்பு அடவுகள் 
  10. கத்தி அடவுகள் (12) 
  11. ஆள் மாறாட்டம் 
  12. வெறுங்கை முறை 
  13. மிருகப்போர் 
  14. பிரிவு ஆயுதங்கள்



4. வியூகங்களும் வடிவுகளும் :

வியூகங்கள் எட்டு வகைப்படும். இவை போர் முறைகளில் பயன்படுத்தப்பட்டவையாகும்.



வியூகங்கள் :

வியூகங்கள் எட்டு வகைப்படும்.  வை: 
  1. மார்சரம் வியூகம் 
  2. பத்மம் வியூகம் 
  3. சர்பம் வியூகம் 
  4. அனுமன் வியூகம் 
  5. சிம்மம் வியூகம் 
  6. விஷ்ணு  வியூகம் 
  7. நரசிம்மம் வியூகம் 
  8. அசுவாரூடம் வியூகம்

மேற்கண்ட எட்டு வியூகங்களையும் ஒன்றாகச் சேர்த்து உண்டாகும் ஒன்பதாவது வியூகம் ஸ்ரீ சக்கர வியூகம் ஆகும்.



வடிவுகள் :

வடிவுகள் பல வகைப்படும். அவைகளாவன : 

  1. கஜ வடிவு 
  2. அகவ வடிவு 
  3. பூனை வடிவு 
  4. நாக வடிவு 
  5. பன்றி வடிவு 
  6. மச்ச வடிவு 
  7. சிங்க வடிவு 
  8. குக்குட வடிவு 



வடிவுகள்

5. கிரந்த பூட்டு முறைகள் :

கிரந்த பூட்டு முறைகள் 64 வகைப்படும். அவைகளாவன : 

  1. ஆனவாரி 
  2. அனுமான் வாரி 
  3. மத்தள கட்டு 
  4. நட்சத்திர நோக்கி 
  5. மன்னிங்க திருப்பன் 
  6. தை தளையன்  
  7. கை ஓடியன் 
  8. கத்திரப் பூட்டு 
  9. கழுத்துப் பூட்டு 
  10. கண்ணன் பூட்டு 
  11. வள்ளி திருப்பன் 
  12. சொட்ட மலத்தி 
  13. சட்ட மலத்தி 
  14. வலம் வீசி 
  15. இடம் வீசி 
  16. வலம் பூட்டி 
  17. இடம் வலி 
  18. வலம் வசம் வலி 
  19. எடுத்து ஏறு 
  20. வலிச்சு ஏறு 
  21. கத்திர பூட்டு கெட்டு 
  22. கவர கயற்றம் 
  23. கோணம் கெட்டி 
  24. கள்ளங் கெட்டி 
  25. பொதப்ப கலக்கி 
  26. ஒதுக்கம் 
  27. குந்தம் சாரி 
  28. குந்தம் ஏறு 
  29. பன்றி படக்கம் 
  30. புலி படக்கம் 
  31. காசம் 
  32. பூபதி 
  33. அக்கிர ஜசாரி 
  34. அர்சுனா 
  35. வாலி 
  36. சுக்ரீவா 
  37. பீமர் 
  38. பரமேஸ்வரர் 
  39. எடுத்தடி 
  40. குத்தித் தள்ளல் 
  41. பிடிச்சு ஏறு 
  42. கொப்பரத் திருமல் கெட்டு 
  43. கொப்பரத் திருமல் 
  44. வானம் நோக்கி 
  45. சர்பந் தூக்கி 
  46. விதுரா 
  47. நீலங்கோரி 
  48. மண்ணுதப்பி 
  49. பெருநடா 
  50. கூடங்கெட்டி 
  51. கோலேறு 
  52. அன்ன மலக்கம் 
  53. செம் படக்கம் 
  54. மறு செம் படக்கம் 
  55. அங்கோலம் 
  56. உபங்கோலம் 
  57. சக்தி பிடி (பூட்டு) 
  58. அடி வாரி 
  59. முடி வாரி 
  60. கால் வாரி 
  61. மாருதி பூட்டு 
  62. அப்பக் கொல்லி 
  63. குப்புறக் கவிழ்த்தி 
  64. ஒடிச்சு மடக்கி 



6. தனுர்வேத பிடிமுறைகள் :

தனுர்வேத பிடிமுறைகள் 16 வகைப்படும். அவைகளாவன : 

  1. வள்ளி பிணச்சல் பிடி 
  2. குந்தம் ஏறு 
  3. கண்ணு பூட்ட 
  4. நிராயுத குந்தம் 
  5. அஸ்தி வளையல் 
  6. தாமரை கூம்பல் 
  7. சவுத்ரேயம் 
  8. விருச்சகுட்சி 
  9. இருதலக் கூம்பல் 
  10. சோரத் துளையல் \
  11. கருட பறப்பு 
  12. மேலாயக் குந்தம் 
  13. காரிக் கெட்டு 
  14. ஒடி முறிந்து சோரத் துளையல் 
  15. வைரம் முறிந்த பூட்டு 
  16. வைரம் முறிந்த கத்திரப் பூட்டு 



7. பயிற்சி நிலைகள் :

களரியின் பல்வேறு பயிற்சி நிலைகள் இதிலடங்கும். 

  1. ஆற்று மணல்,
  2.  கடல் மணல், 
  3. சேற்றுக்குழி, 
  4. பள்ளம், 
  5. மேடு, 
  6. காடுகள், 
  7. மலைகள்,
  8. நெருப்பு புகை மூட்டங்கள், 
  9. கடும் வெயில், 
  10. கடுங்குளிர், 
  11. கடும்பட்டினி, 
  12. நன்கு உணவருந்திய பிறகு 
போன்ற பல நிலைகளில் இக்களரி பயிற்றுவிக்கப்படுகிறது.



8. சாட்டங்களும் மறிவுகளும் :

களரி பயிற்சியின் சாட்டங்களும், மறிவுகளும் இதிலடங்கும். இதில் பல்வேறு வகைகள் உண்டு.


9. தட்டு மர்மங்களும் கைப்பிரயோகங்களும் :




உடலிலுள்ள வர்ம தானங்களில் தட்டுவதால் ஏற்படும் விளைவுகளும் அதற்கான பரிகாரங்களும் இதிலடங்கும்.



10. தடவுகளும் தைல யோகங்களும் :

இது மருத்துவ நுட்பமாகும். களரி பயிற்சிக்கு உடலை ஆயத்தப்படுத்தும் விதாமாக உடலில் தேய்க்கும். 

  1. வசவெண்ணெய் போன்ற தைலங்களும், 
  2. உடலிலுள்ள வர்ம குற்றங்களுக்காக முக்கூட்டு போன்ற தைலங்களும்,
  3. வாத குற்றங்களுக்காக நாராயணத் தைலம் (சித்த ஒளஷத தைலம்) போன்றவைகளும்,
  4. எலும்பு முறிவு நரம்பு காயங்களுக்கு முறிவு கூட்டு போன்ற பல்வேறு தைலங்களும் பயன்படுத்தப்படுகின்றன. 
(“இத்தைலம் அஷ்டாங்க இருதய யோகம் அல்ல. இது அகத்திய முனி கிரந்தத்தின் யோகமாகும்’’-என்று கையெழுத்துப் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.)



வர்ம ஸ்தான சிகிச்சையில் வர்மமும் மருந்துகளும் அறிந்து கொள்வது அவசியமாகும்.   வெட்டுவதாலும்,     தட்டுவதாலும்,      கொட்டுவதாலும்,




முறிவுகளாலும் ஏற்படும் நோய்களுக்கு உடனே சிகிச்சை செய்ய வேண்டும். இதில் பல்வேறு சிகிச்சை முறைகள் அடங்கும். அவை :



(i) உழிச்சல் முறை :


இது “திரும்மல்’’ முறை எனவும் வழங்கப்படும். பல்வேறு தைலங்களை பயன்படுத்தி உடலை தடவி அல்லது திருமிவிடும் முறையாகும்.


(ii) பிழிச்சல் முறை :

பிழிச்சல்


இது சூடான மருந்து எண்ணெய்யை உடலில் பிழிந்து விட்டு ஓரே சீராக உடலில் தடவிச்செய்யும் ஒரு முறையாகும்.


(iii) பொதிச்சல் முறை :


இது “தல பொதிச்சல்’’ என்றும் அழைக்கப்படும். தலைக்கு எண்ணெய் தேய்த்து பின் மூலிகைக்குளம்பால் குறிப்பிட்ட நேரம் தலையை பொதிந்து வைத்திருக்கும் முறையாகும்.


(iv) கிழி :

கிழி

இது மருந்து பொட்டலங்களை சூடாக்கி உடலில் ஒற்றடமிடும் முறையாகும். இதில் இலைக்கிழி, சூரணக் கிழி, நவரக்கிழி, மாமிசக்கிழி ஆகிய முறைகள் அடங்கும்.



(v) தாரை :

சிரோ தாரா

இது தொடர்ச்சியாக ஒரு நீரோட்டம் போல திரவ மருந்துகளை உடலில் அல்லது தலையில் ஊற்றி (சிரோ தாரா) செய்யப்படும் மருத்துவ முறையாகும். 

இதில் 

  1. தைலங்கள் (தைல தாரா), 
  2. மோர் அல்லது பாலுடன் சேர்க்கப்பட்ட கசாயங்கள் (தக்ர தாரா),
  3.  பசு நெய் சேர்க்கப்பட்ட தைலங்கள் (துக்த தாரா), 
  4. காடிகள் (காடி தாரா), 
  5. குறுந்தொட்டி சேர்த்துக்காய்ச்சிய பால் (ஷீர தாரா) 
போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.


இந்த வடக்கன் களரி பாடத்திட்டம் என் தாத்தாவுக்கு அவரது நண்பர் குருக்கல் துரைசாமி நாடார், திருநெல்வேலி மாவட்டம்  அவர்களால் வழங்கப்பட்டது.


மற்றொரு வலைப்பதிவில் இருந்து அவரது ஒரு அரிய புகைப்படம் எனக்கு கிடைத்தது


குருக்கள் துரைசாமி நாடார் மற்றும் அவரது மாணவர்கள், திருநெல்வேலி மாவட்டம்




No comments:

Post a Comment